தமிழக மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக, டாக்டர் சுகந்தி ராஜகுமாரி நியமனம்..!
Dr Suganthi Rajakumari appointed as Director of Medical Education and Research Tamil Nadu
தமிழக மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக, டாக்டர் சுகந்தி ராஜகுமாரி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக பணியாற்றிய டாக்டர் சங்குமணி, கடந்த ஜூன், 30-ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, கூடுதல் இயக்குநரான தேரணிராஜன், பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இரண்டு மாதங்களாக இயக்குநர் பதவி காலியாக இருந்த நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லுாரி முதல்வராக இருந்த சுகந்தி ராஜகுமாரியை, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக நியமித்து, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் செந்தில்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி,டாக்டர் சுகந்தி ராஜகுமாரி, மருத்துவ கல்வி இயக்குநராக நேற்று பொறுப்பேற்றுள்ளார் .

கன்னியாகுமரி மாவட்டம், வடக்கு சூரங்குடி கிராமத்தைச் சேர்ந்த சுகந்தி ராஜகுமாரி, 36 ஆண்டுகளாக மருத்துவ கல்வி பணியில் உள்ளார். இவர் பல்வேறு அரசு மருத்துவ கல்லுாரிகளில், தோல் மருத்துவ துறையில் பேராசிரியர் மற்றும் துறை தலைவராக பணியாற்றியுள்ளார். கடந்த 2019-இல் பதவி உயர்வு பெற்று, கன்னியாகுமரி மருத்துவ கல்லுாரி முதல்வரானவர்.
அதன் பின்னர், மருத்துவ கல்வி இயக்கக கூடுதல் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது மருத்துவ கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Dr Suganthi Rajakumari appointed as Director of Medical Education and Research Tamil Nadu