கூகுள் நிறுவனத்திற்கு எதிராக 30 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ள ஐரோப்பிய யூனியன்: கடுப்பான அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..! - Seithipunal
Seithipunal


கூகுள் நிறுவனத்திற்கு  ஐரோப்பிய ஒன்றியம் கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. பயனர்களின் தரவுகளை கூகுள் கண்காணிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த குற்றசாட்டுகளுக்கு கூகுள் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது, விளம்பர தொழில்நுட்ப சந்தையில் தனது ஆதிக்க நிலையை தவறாக பயன்படுத்தியதற்காக கூகுள் நிறுவனம் மீது ஐரோப்பிய ஒன்றியம் அபராதம் விதித்துள்ளது.

இதனை எதிர்த்து கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்யப்போவதாக உறுதி அளித்துள்ள நிலையில், இதனால் ஐரோப்பிய ஒன்றியம் விதித்த அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நாட்டு அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 

ஐரோப்பிய ஒன்றியம் இன்று மற்றொரு சிறந்த அமெரிக்க நிறுவனமான கூகுளை $3.5 பில்லியன் டாலர் அபராதம் விதித்து தாக்கியுள்ளது. கூகிள் மற்றும் பிற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட பல அபராதங்கள், வரிகளை விட அதிகமானது. இது மிகவும் நியாயமற்றது. இதை அமெரிக்க மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், ஆப்பிள் நிறுவனத்திற்கு 17 பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. ( இந்திய மதிப்பில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்). அவர்கள் கட்டாயத்தின் பேரில் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும், இப்படி அபராதமாக விதிக்கப்பட்ட பணத்தை அவர்களுக்கு திருப்பி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு இல்லையெனில், அமெரிக்க நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் நியாயமற்ற அபராதங்களை ரத்து செய்ய பிரிவு 301 நடவடிக்கையைத் தொடங்க நான் கட்டாயப்படுத்தப்படுவேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தான் முன்பே கூறியது போலவே, இந்த பாரபட்சமான செயல்களை அனுமதிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,  கூகிள் கடந்த காலங்களில் 13 பில்லியன் டாலர்களை அபராதமாக செலுத்தியுள்ளது. அது எவ்வளவு பைத்தியக்காரத்தனமானது..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்படி அபராதம் விதிப்பது, அவர்களுக்கு வருமானம் பெறுவதற்கான வழியாகிவிட்டது என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.  அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிரான இந்த நடைமுறையை ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

US President Trump has condemned the European Union for imposing a fine of 30 thousand crore rupees against Google


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->