நெல்லை பெண் வீராங்கனை எட்வினா ஜேசன் இரட்டை வெள்ளி சாதனை! - உதயநிதி ஸ்டாலின் பாராட்டு, பரிசு மழை!
Paddy field athlete Edwina Jason wins double silver Udhayanidhi Stalin praises her showering her with prizes
தமிழ்நாட்டிற்கு மிகுந்த பெருமையை தேடித்தந்துள்ள இளம் தடகள வீராங்கனை எட்வினா ஜேசன், பஹ்ரைனில் நடைபெற்ற 3-வது ஆசிய இளையோர் விளையாட்டு போட்டியில் சிறப்பாகத் திகழ்ந்தார். மேலும், நெல்லையைச் சேர்ந்த இவர், 400 மீட்டர் ஓட்டம் மற்றும் 1,000 மீட்டர் மெட்லே ரிலே போட்டிகளில் அசத்தி இரண்டு வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றினார்.

அவரது இந்த அருமையான சாதனையை பாராட்டும் வகையில், சென்னை திரும்பிய எட்வினா ஜேசனை நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கி பாராட்டினார்.
இதோடு, அண்மையில் ராஞ்சியில் நடைபெற்ற 4-வது தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் தமிழக வீரர்கள் அசத்தலான வெற்றி பெற்றனர். மொத்தம் 4 தங்கம் உள்பட 10 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டின் தடகள ஆற்றலை வெளிப்படுத்தினர்.
அந்த வீரர்கள்மனவ், நந்தினி, ஒலிம்பா ஸ்டெபி, சரண், தினேஷ், ஆதர்ஷ் ராம், பவானி ஆகியோரின் திறமைக்காக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதி மூலம் ரூ.15½ லட்சம் ஊக்கத்தொகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.மேலும், விளையாட்டை ஊக்குவித்து வரும் தமிழக அரசின் இந்த முயற்சி, இளம் வீரர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
English Summary
Paddy field athlete Edwina Jason wins double silver Udhayanidhi Stalin praises her showering her with prizes