திமுகவுக்கு ஆதரவு இல்லை! பா.ரஞ்சித்தை கதறவிடும் திமுக & ஆதரவாளர்கள்! - Seithipunal
Seithipunal


நேற்று செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பா.ரஞ்சித்திடம், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக அரசியல் நிலைப்பாடு மாறுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்க்கு பதிலளித்த பா.ரஞ்சித், "பிரச்சனையின் அடிப்படையில் நாம் சில கேள்விகளை கேட்கிறோம். ஆனால், பிரச்சனைகளை தீர்த்து வைக்காத, தீர்த்து வைக்க முயலாத, தீர்த்து வைப்பதற்கான காரணங்களை ஆராயததால் நாம் நிச்சயமாக நமது முடிவையும் மாற்ற வேண்டிய தேவை இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், இது ஒரு எச்சரிகை தான்" என்று தெரிவித்தார்.

இதனை சில செய்தி ஊடகங்கள் திமுகவிற்கு பா.ரஞ்சித் ஆதரவளிக்க போவதில்லை என்று செய்தி வெளியிட்டன. இந்த செய்தியை அடிப்படையாக கொண்டு திமுக மற்றும் திமுகவின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் உள்ள சிலர் "தி.மு.க.வுக்கு ஓட்டுப் போட வேண்டாம்" எனும் தோணியில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக ஒரு சில பதிவுகளின் விவரம் பின்வருமாறு:

"சரி நீங்க ஆதரிக்க வேண்டாம், இனி யாருக்கு உங்க ஆதரவு என்பதை சொன்ன தானே தெரியும் உங்க நிலைப்பாடு சரியா ! தவறா !  என்று"


பணக்காரர்கள், பதவிக்காரர்கள், படிப்புக்காரர்கள் மட்டுமே ஓட்டுப்போட உரிமை பெற்றிருந்த காலத்தில், அதாவது தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2.9% பேர் மட்டுமே ஓட்டுப்போடும் உரிமை பெற்றிருந்த 1921 தேர்தலில் நீதிக்கட்சி வென்றது. 

அந்த நீதிக்கட்சி அரசு தான், தனக்கு ஓட்டுப்போடும் உரிமையையே பெற்றிருக்காத பட்டியல் ஜாதி, பிற்படுத்தப்பட்ட ஜாதி மக்கள் அனைவருக்கும் கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டு உரிமையை வழங்கியது. தங்களுக்கு ஓட்டுப் போடாத மக்களின் விடுதலைக்காகவே தனது எல்லா அதிகாரங்களையும் பயன்படுத்தியது.  

அந்த நீதிக்கட்சியின் தொடர்ச்சி தான் இந்த திராவிட மாடல் ஆட்சி. "உங்கள் ஒருவரது வாக்கை" தி.மு.க.வுக்கு செலுத்தினாலும், இல்லாவிட்டாலும் உங்களுக்குமான அரசாகவே இந்த அரசு இயங்கும். எனவே ரொம்ப கஷ்டப்பட்டு, தி.மு.க.வுக்கு ஓட்டுப் போட வேண்டாம்.


பூனை கண்ணை மூடிக் கொண்டு...
பூலோகம் இருண்டு விட்டதாக நினைச்சுக்குமாம்..!
- பழமொழி

தலித் சாதிவெறி ஓநாய்கள் ஆதரவளிக்காவிட்டால்...?
திமுகவுக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை!

அப்புறம்,
மாட்டுக்கறி வெச்சிருந்தான்,
தலித்-னு உபி, மபி பீகார் போல
அடிச்சி துவைக்கறப்போ
கேட்க கூட நாதி இருக்காது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pa ranjith DMK support 2026 State assembly election issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->