வாக்குச்சாவடியில் ஓவர் உற்சாகம்...! பானை சின்னத்திற்கு வாக்களித்ததை வீடியோ எடுத்த திமுக நிர்வாகி அதிரடி கைது...!
Over excitement polling booth DMK executive arrested videotaping voting pot symbol
தமிழக சட்டசபை தேர்தலின் வாக்குப்பதிவு நேற்று மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்போன் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டதுடன், வாக்களிக்கும் செயல்முறையை புகைப்படம் அல்லது வீடியோவாக பதிவு செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் முன்கூட்டியே கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த விதிமுறைகளை மீறினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த திமுக இளைஞரணி துணை அமைப்பாளரான எம்.ஜி.ஆர்.விக்கி என அழைக்கப்படும் விக்னேஸ்வரன் (33), களத்துமேடு நகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் காலை 10 மணியளவில் தனது வாக்கை பதிவு செய்தார்.
அப்போது, திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரின் ‘பானை’ சின்னத்திற்கு வாக்களித்ததைக் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, பின்னர் அதை முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் கவனத்தை ஈர்த்தது.இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் கமலம், சம்பந்தப்பட்ட காவலர்களிடம் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக விக்னேஸ்வரன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை காவலர்கள் விரைவாக கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், தேர்தல் விதிமுறைகளின் கடைப்பிடிப்பில் அதிகாரிகள் கடுமையாக உள்ளனர் என்பதையும் தெளிவுபடுத்துகிறது என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Over excitement polling booth DMK executive arrested videotaping voting pot symbol