எங்கள் உயிருக்கு நேர்! துணை முதல்வர் ஓபிஎஸ் போட்ட ட்வீட்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் ஆண்டு தோறும் பிப்ரவரி 21 ஆம் தேதி தாய்மொழி தினமாகக் கடைபிடிக்கப் படுகிறது. நாடு, மதம், சாதிகளை கடந்து தமிழராகிய நம் அனைவரையும் ஒன்றிணைப்பது தமிழ் மொழி ஒன்று தான். இது பல்லாயிரமாண்டு அழியாத நம் பண்பாட்டின் அடையாளம்.

கடந்த 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் தாக்காவில், வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் தாய் மொழிக்கு சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. 

வங்காள தேச அரசின் முயற்சி மற்றும் பல்வேறு நாடுகளின் ஆதரவோடு, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ) அமைப்பின் 1999, பிப்ரவரி 21 உலக தாய் மொழி தினமாக அறிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து 2000 ஆம் ஆண்டு முதல் இந்த நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று 21 .02 .2021 உலக தாய் மொழி தினம் கொண்டப்படுகிறது. வங்காளதேசத்தில் உலக தாய்மொழி தினம் தேசிய விடுமுறை தினமாகும். 

இந்நிலையில், தமிழக துணை முதல் ஓ பன்னீர்செல்வம் தனது ட்வீட்டர் பக்கத்தில், 

"தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத் 
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!" 

உலகத் தாய்மொழி தினமான இன்று, உலக மொழிகளுக்கெல்லாம் தாயாகிய உயர்தனிச் செம்மொழியாம் நம் தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்டிருக்கும் அனைத்து தமிழ் மக்களுக்கும் "உலகத் தாய்மொழி தின" நல்வாழ்த்துகள்!" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPS wish to Mother Language Day


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->