இன்று தொடக்கம்...! தமிழ்நாட்டை இணைக்கும் 3 அம்ரித் பாரத் ரெயில்கள்...! - Seithipunal
Seithipunal


வந்தே பாரத் போன்று அதிவேகமாக அல்ல; ஆனால் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தக் கூடிய மலிவான, நவீன ரெயில் பயணத்தை உறுதி செய்யும் வகையில் இந்திய ரெயில்வே ‘அம்ரித் பாரத்’ ரெயில் சேவைகளை நாடு முழுவதும் படிப்படியாக அறிமுகப்படுத்தி வருகிறது.

ஏ.சி. வசதி இன்றி, ஆனால் மேம்படுத்தப்பட்ட இருக்கைகள், பாதுகாப்பு வசதிகள் மற்றும் நவீன வடிவமைப்புடன் இந்த ரெயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதல்முறையாக, ஈரோடு – பீகார் மாநிலம் ஜோக்பானி இடையே அம்ரித் பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகம் மற்றும் மேற்கு வங்காளம் இடையிலான நீண்ட தூர ரெயில் இணைப்பை விரிவுபடுத்தும் வகையில், மூன்று புதிய அம்ரித் பாரத் ரெயில் சேவைகளை இயக்க ரெயில்வே வாரியம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதன்படி, ஜல்பாய்குரி – திருச்சி, தாம்பரம் – சந்திரகாச்சி, நாகர்கோவில் – ஜல்பாய்குரி ஆகிய வழித்தடங்களில் இந்த ரெயில்கள் வாராந்திர சேவைகளாக பயணிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாட்டை நேரடியாக இணைக்கும் இந்த 3 புதிய அம்ரித் பாரத் ரெயில்கள் இன்று (சனிக்கிழமை) முதல் பொதுச் சேவையில் இணைக்கப்படுகின்றன. மேற்கு வங்காள மாநிலம் ரங்கபாணி ரெயில் நிலையத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில், இந்த மூன்று ரெயில் சேவைகளும் ஒரே மேடையில் இருந்து தொடங்கி வைக்கப்படுகின்றன.

நாகர்கோவில் – ஜல்பாய்குரி அம்ரித் பாரத் ரெயில் (வண்டி எண்: 20604) இன்று மதியம் 1.45 மணிக்கு ரங்கபாணி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, நீண்ட மாநிலங்களை கடந்து, 19-ம் தேதி இரவு 7.15 மணிக்கு நாகர்கோவிலை அடைகிறது. இந்த ரெயில் மதுரை, விருதுநகர், சாத்தூர், திருப்பூர், திண்டுக்கல், கோவில்பட்டி, கோவை, பொள்ளாச்சி,காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு,  உடுமலைப்பேட்டை, பழனி, நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நிற்கும்.

அதேபோல், ஜல்பாய்குரி – திருச்சி அம்ரித் பாரத் ரெயில் (20610) இன்று மதியம் 1.45 மணிக்கு ஜல்பாய்குரியில் இருந்து புறப்பட்டு, 19-ம் தேதி மதியம் 2.15 மணிக்கு திருச்சி ரெயில் நிலையத்தை சென்றடையும்.

இந்த சேவை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக பயணிக்கும்.இதனைத் தொடர்ந்து, தாம்பரம் – சந்திரகாச்சி அம்ரித் பாரத் ரெயில் (16107) நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2.45 மணிக்கு சந்திரகாச்சியில் இருந்து புறப்பட்டு, 19-ம் தேதி மாலை 6.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த மூன்று புதிய அம்ரித் பாரத் ரெயில்களுக்கான வழக்கமான இயக்க நேரம், நாட்கள் மற்றும் கட்டண விவரங்கள் விரைவில் தனித்தனியாக அறிவிக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Starting today 3 Amrit Bharat trains connecting Tamil Nadu


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->