கிழக்கிலிருந்து தெற்குக்கு அதிவேகப் பயணம்...! ரங்காபானி–நாகர்கோவில் வந்தே பாரத் இயக்கம்...!
high speed journey from east to south Rangapani Nagercoil Vande Bharat service begins
நாடு முழுவதும் ரெயில் பயணத்தை அதிவேகமாகவும், நவீன வசதிகளுடனும் மாற்றும் நோக்கில் மத்திய அரசு வந்தே பாரத் சிறப்பு ரெயில் சேவைகளை விரிவுபடுத்தி வருகிறது.
அந்த திட்டத்தின் தொடர்ச்சியாக, மேற்குவங்கத்தின் ரங்காபானி – தமிழ்நாட்டின் நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 02603) இன்று (சனிக்கிழமை) முதல் சேவையில் அறிமுகமாகிறது.

இதன்படி, ரங்காபானி ரெயில் நிலையத்திலிருந்து இன்று மதியம் 1.45 மணிக்கு புறப்படும் இந்த அதிவேக ரெயில், நீண்ட தூரப் பயணத்தை குறுகிய நேரத்தில் கடந்து, திருப்பூர் நகரை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 8.56 மணிக்கு சென்றடைகிறது.
தொடர்ந்து, கோவில்பட்டி, நெல்லை, உடுமலை, பழனி, திண்டுக்கல், கோவை, பொள்ளாச்சி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வழியாக பயணித்து, நாகர்கோவிலை இரவு 7.15 மணிக்கு சென்றடையும்.
இந்த புதிய வந்தே பாரத் சேவை மூலம் கிழக்கிந்திய பகுதிகளுக்கும் தென் தமிழ்நாட்டுக்கும் இடையிலான பயணம் மேலும் வேகமாகவும், வசதியாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் தகவல் தெரிவித்துள்ளார்.
English Summary
high speed journey from east to south Rangapani Nagercoil Vande Bharat service begins