மத்திய அரசு விருது பெரும் பெண் எழுத்தாளர் அம்பை மற்றும் கவிஞர் முருகேஷுக்கு ஓபிஎஸ் வாழ்த்து.!! - Seithipunal
Seithipunal


தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட 24 மொழிகளில் படைக்கப்படும் தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன், விருதுகள் வழங்கப்படும்.

2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர்களின் பட்டியலில் மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் அம்பை இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை என்ற சிறுகதைத் தொகுப்புக்காக விருது வழங்கப்படவுள்ளது. 

இதேபோல குழந்தை இலக்கியப் பிரிவில் வழங்கப்படும் பால புரஸ்கர் விருது இந்த ஆண்டு தமிழகத்தை சார்ந்த கவிஞர் முருகேஷுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாவுக்கு மகன் சொன்ன உலகின் முதல் கதை என்றால் குழந்தை இலக்கிய நூலுக்காக இம்முறை பால புரஸ்கர் விருது வழங்கப்பட உள்ளது. இதையடுத்து, தமிழகத்தை சார்ந்த எழுத்தாளர்கள், அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 2021-ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் சாகித்ய அகாதமி விருது பிரபல பெண் எழுத்தாளர் திருமதி அம்பை அவர்கள் தமிழ் மொழியில் எழுதிய 'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சை பறவை' என்ற சிறுகதை தொகுப்பிற்கு வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இவ்விருதைப் பெறும் நான்காவது பெண் எழுத்தாளர் திருமதி அம்பை அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். அவருடைய எழுத்துப் பணி தொடரவும், அவர் மேலும் பல உயரிய விருதுகளைப் பெறவும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசின் பால சாகித்ய புரஸ்கார் விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ் அவர்கள் எழுதிய "அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை" என்ற சிறுவர் இலக்கியத்திற்கு வழங்கப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. கவிஞர் முருகேஷ் அவர்களுக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுக்களும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops wish for ambai and murugesh


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->