தேவர் குருபூஜை நாளில் அதிமுகவுக்கு தாவிய முக்கிய புள்ளி!! ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி!!
OPS team Joint Secretary rejoined in AIADMK
முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்ள இன்று காலை சாலை மார்க்கமாக பசும்பொன் கிராமத்திற்கு சென்ற தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..

அதேபோன்று அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக செல்கிறார். இன்று நடைபெறும் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், சமுதாயத் தலைவர்களும் பசும்பொன் கிராமத்திற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
தேவர் நினைவிடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்த வரக்கூடாது என ஒரு சில சமுதாய அமைப்பை சேர்ந்தவர்களும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் எடப்பாடி பழனிச்சாமி குரு பூஜையில் பங்கேற்க அனுமதி வழங்கக்கூடாது என சட்டக் கல்லூரி மாணவர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் அமைந்திருக்கும் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்று உள்ளார்.
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அணியின் புரட்சித்தலைவி அம்மா பேரவையின் மாநில இணை செயலாளர் துறையூர் கணேசன் பாண்டியன் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ முன்னிலையில் தன்னை அதிமுகவில் மீண்டும் இணைத்துக் கொண்டார். தேவர் குரு பூஜையில் பிஸியாக இருக்கும் நேரத்தில் மாநில நிர்வாகி ஒருவர் அதிமுகவுக்கு தாவி இருப்பது ஓபிஎஸ் அணியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
OPS team Joint Secretary rejoined in AIADMK