எடப்பாடி பழனிச்சாமி எனக்கு ஜூனியர்.. ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


எடப்பாடி பழனிச்சாமிக்கு திராவிட வரலாறு தெரியாது, அண்ணா திராவிட வரலாறு தெரியாது என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

அதிமுக கடந்த சில நாட்களாக இரண்டாக பிளவுபட்டு இபிஎஸ், ஓபிஎஸ் என இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமி அணியை அதிமுகவாக ஏற்றுக்கொண்டு இரட்டை இலை சின்னத்தை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இரு அணிகளும் மாறி மாறி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதாரவாளர் வைத்தியலிங்கம் இன்று செய்தியர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி எனக்கு ஜூனியர் நான் 2001 ஆம் ஆண்டிலேயே அமைச்சராகி விட்டேன் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி 2011 இல் தான் அமைச்சரனார்.

மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு திராவிட வரலாறும் தெரியாது, அண்ணா திமுக வரலாறு என்று தெரியாது. தமிழக அரசியல், இந்திய அரசியல், உலக அரசியல் என என்னோடு அவர் விவாதிக்க தயாரா? என சவால் விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS supporter vaithilingam speech about EPS


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->