ஒன்று கூடும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி..!! இபிஎஸ்க்கு பதிலடி கொடுக்க மதுரையில் போட்டி மாநாடு..!!
OPS Sasikala TTV coming together in Madurai conference
அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் தனது பலத்தை நிரூபிப்பதற்காக திருச்சியில் தனது ஆதரவாளர்களை திரட்டி மாநாட்டை நடத்தினார். இந்த மாநாடு ஓபிஎஸ் தரப்பினர் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்ததால் தமிழக முழுவதும் மேலும் நான்கு இடங்களில் மாநாடு நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் அரசியல் ரீதியில் ஒன்றிணைந்து செயல்பட போவதாக கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தனர். அதே போன்று சசிகலாவையும் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்திருந்தார்.
அதே போன்று அனைவரும் ஒன்று சேர்ந்து அதிமுகவை மீட்க வேண்டும் என டிடிவி தினகரன் கூறி வருகிறார். இதற்கிடையே வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் அதிமுக சார்பில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி உதயகுமார் ஆகியோர் இப்போதே தொடங்கி விட்டனர்.

எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் நடக்கும் மதுரை மாநாட்டிற்கு பிறகு பதிலடி கொடுக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் என மூன்று பேரும் இணைந்து பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளையும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் தரப்பினர் செய்து வருகின்றனர்.
இந்த மாநாட்டில் சசிகலாவை பங்கேற்க வைக்க ஓ பன்னீர்செல்வம் தரப்பு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மதுரையில் நடைபெறும் இரு மாநாடுகளும் தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
OPS Sasikala TTV coming together in Madurai conference