அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரம்., ஓபிஎஸ்.,யை தொடர்ந்து டிடிவி தினகரன் வேதனையுடன் போட்ட டிவிட்.! - Seithipunal
Seithipunal


அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓபிஎஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மீனவப்பெண்மணி ஒருவர் பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சிலதினங்களில், தற்போது நரிக்குறவர் குடும்பத்தினரை பேருந்திலிருந்து இறக்கிவிட்டு, அவர்களது உடைமைகளை வீசி எறிந்ததாகவும் செய்திகள் வந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. 

இதற்கு அஇஅதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இதுபோல சம்பவங்கள் நடைபெறாமல் தடவுக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஓபிஎஸ் கோரிக்கை விடுத்தது இருந்தார்.

இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலும் அரசு பேருந்துகளில் நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலும் அரசு பேருந்துகளில் நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கின்றன. 

பயணிகளிடம் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்தும், அவர்களுக்கு இருக்கிற சமூக பொறுப்பு குறித்தும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்துவது பற்றி தமிழக அரசு சிந்திக்க வேண்டும். 

இனி ஒரு சம்பவம் இப்படி நடக்காதவாறு தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்று தினகரன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops and ttv say about govt bus passengers issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->