தவெக-வில் அதிரடி ஆக்ஷன்...! ரீல்ஸ் போட்ட நிர்வாகியை சஸ்பெண்ட் செய்த கட்சித் தலைமை...! - Seithipunal
Seithipunal


விருதுநகரில் போலியோ சொட்டு மருந்து முகாமில் நடந்த சம்பவம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. குழந்தைகளுக்கான சுகாதார முகாமில் கட்சி நிர்வாகி ஒருவர் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகரில் நேற்று முன்தினம் பல்வேறு மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்றன. அந்த வகையில் சின்னமூப்பன்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்திலும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், விருதுநகர் த.வெ.க. ஒன்றிய செயலாளரான புல்லலக்கோட்டையைச் சேர்ந்த முத்துவேல் தனது ஆதரவாளர்களுடன் அந்த முகாமிற்கு சென்றுள்ளார்.

அங்கு மருத்துவ பணியாளர்களிடம் ஆய்வு நடத்துவது போல பல்வேறு விவரங்களை கேட்டறிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து, முதல்-அமைச்சர் விஜய் நடித்த திரைப்பட பாடலை பின்னணியாக வைத்து காணொளி பதிவு செய்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அதிலும், முறையான மருத்துவ பயிற்சி அல்லது அனுமதி எதுவும் இல்லாமல் முகாமிற்கு வந்த குழந்தை ஒருவருக்கு தன் கையால் போலியோ சொட்டு மருந்து வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்வையும் காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த ‘ரீல்ஸ்’ காணொளிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கடும் விமர்சனங்களை கிளப்பி வருகின்றன.அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்கள் பிரதிநிதிகளை தவிர மற்ற கட்சி நிர்வாகிகள் ஆய்வு மேற்கொள்ளக்கூடாது என்று அமைச்சர்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தனர்.

இத்தகைய சூழலில், அங்கன்வாடி மையத்தில் நேரடியாக சென்று ஆய்வு செய்ததுடன், குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி அதனை விளம்பர காட்சியாக வெளியிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.இந்த விவகாரத்தை தொடர்ந்து, கட்சியின் ஒழுங்கு விதிகளை மீறி செயல்பட்டதாக விருதுநகர் த.வெ.க. ஒன்றிய செயலாளர் முத்துவேல் மீது கட்சி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் முத்துவேலை 3 மாத காலத்திற்கு தற்காலிகமாக நீக்கம் செய்து, விருதுநகர் த.வெ.க. கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tvk Party leadership suspends executive who posted reels during polio


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->