திமுக-வில் கமிஷன், கரெக்‌ஷன், கட்டிங் ஊழல் தலைதூக்கியிருந்தது...! - செய்தியாளருடன் வைகோ கடும் வாக்குவாதம்...! - Seithipunal
Seithipunal


த.வெ.க. கூட்டணியில் மதிமுக உறுதியாக தொடரும் என்றும், விஜய் நீண்ட காலம் தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக இருப்பார் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, தற்போதைய அரசியல் சூழல், தி.மு.க. ஆட்சி மற்றும் கூட்டணி நிலைப்பாடு குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்தார்.

தி.மு.க. ஆட்சி குறித்து அவர் பேசுகையில், “கடந்த ஆட்சிக்காலத்தில் மக்கள் அதிருப்தியின் உச்சத்தில் இருந்தனர். அப்போது நிர்வாகத்தின் பல்வேறு நிலைகளிலும் கமிஷன், கரெக்‌ஷன், கட்டிங் என்ற பெயரில் ஊழல் தலைதூக்கியிருந்தது.அந்த நேரத்தில் நாங்கள் கூட்டணியில் இருந்ததால் இதுகுறித்து பொதுவெளியில் விமர்சிக்கவில்லை.

கூட்டணியில் இணைந்தபின் வெளியில் வந்து குற்றச்சாட்டு முன்வைப்பது அரசியல் நாகரிகத்திற்கு பொருந்தாது” என்று தெரிவித்தார்.தொடர்ந்து த.வெ.க. கூட்டணி குறித்து பேசிய வைகோ, “த.வெ.க.வுடனான கூட்டணியில் மதிமுக உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது.

இந்த கூட்டணியின் ஓர் முக்கிய அங்கமாக மதிமுக தொடர்ந்து செயல்படும்.வரவிருக்கும் 5 ஆண்டுகள் மட்டுமல்ல, அதற்குப் பிறகும் விஜய் தமிழகத்தின் முதல்-அமைச்சராக தொடர்வார் என்ற வலுவான நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று கூறினார்.

இந்த பேட்டியின்போது, “தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது ஏன் அக்கட்சியை விமர்சிக்கவில்லை?” என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.இந்த கேள்விக்கு வைகோ கடுமையாக எதிர்வினையாற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து செய்தியாளருக்கும் வைகோவுக்கும் இடையே வாக்குவாதம் நீடித்தது.இதையடுத்து அங்கிருந்த மதிமுக நிர்வாகிகளும் விவாதத்தில் ஈடுபட்டதால், பேட்டி அரங்கில் சில நிமிடங்கள் பதற்றமான சூழல் நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Commission correction and cutting scandals were rampant DMK Vaiko heated argument journalist


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->