இனி பிரைவசிக்கு நோ பயம்...! மொபைல் நம்பர் இல்லாமலேயே வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாம்...! - அசத்தல் புதிய அப்டேட்...!
No more fear privacy You can use WhatsApp without mobile number Amazing new update
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் அன்றாட தகவல் பரிமாற்றத்தில் முக்கிய பங்காற்றும் வாட்ஸ் அப், தொடர்ந்து புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி பயனர்களை கவர்ந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் 50 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ் அப்பைப் பயன்படுத்தி வருவது அதன் மகத்தான வரவேற்பை வெளிப்படுத்துகிறது.

பயனர்களின் தேவைகளையும், அதிகரித்து வரும் தொழில்நுட்ப போட்டியையும் கருத்தில் கொண்டு, வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், நீண்ட நாட்களாக பயனர்கள் எதிர்பார்த்த முக்கிய அம்சம் தற்போது அறிமுகமாக உள்ளது.
அதன்படி, இனி வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணை பகிர வேண்டிய அவசியம் குறைய உள்ளது. புதிய வசதியாக, பயனர்கள் தங்களுக்கென தனிப்பட்ட பயனர் பெயரை உருவாக்கி, அதன் மூலமாகவே தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட முடியும்.இந்த புதிய அம்சம், பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அறிமுகமில்லாத நபர்களுடன் உரையாடும் சூழலில், தொலைபேசி எண் வெளிப்படாமல் இருக்க இந்த வசதி பெரிதும் உதவும்.செயலியின் அமைப்புகள் பகுதியில் உள்ள கணக்கு பிரிவின் மூலம் பயனர் பெயரை முன்பதிவு செய்யும் வசதி படிப்படியாக அறிமுகமாகி வருகிறது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.பயனர் பெயர் வசதி முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பிறகு, யாராவது முதல் முறையாக செய்தி அனுப்பும் போது, உங்கள் தொலைபேசி எண்ணுக்கு பதிலாக நீங்கள் தேர்வு செய்த பயனர் பெயர் மட்டுமே அவர்களுக்கு தெரியும்.
பயனர்களின் பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் வசதியை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் இந்த புதிய மாற்றம், வாட்ஸ் அப் பயன்பாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
No more fear privacy You can use WhatsApp without mobile number Amazing new update