கொலையா...? தற்கொலையா...? சொகுசு காரில் சடலமாகக் கிடந்த பிரபல டாக்டர்...! - பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம்...!
Murder Suicide famous doctor found dead luxury car shocking incident that caused stir
ராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்ட காருக்குள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டம் உதய்ப்பூர்வாதி பகுதியை சேர்ந்தவர் சந்தீப் குமார் (37). மருத்துவரான இவர், குடும்பத்துடன் அதர்ஷ் நகர் பகுதியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை மருத்துவமனையில் பணியை முடித்துவிட்டு காரில் வீட்டிற்கு திரும்பிய சந்தீப் குமார், வழக்கம்போல் வீட்டின் வாசலில் காரை நிறுத்தியுள்ளார்.
ஆனால், காரை நிறுத்திய பின்னரும் அவர் வெளியே இறங்காமல் நீண்ட நேரம் வாகனத்துக்குள்ளேயே இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், காரின் அருகே சென்று பார்த்தனர். அப்போது, காருக்குள் சந்தீப் குமார் அசைவின்றி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவம் குறித்து கavalargal-க்கு தகவல் அளிக்கப்பட்டது.இந்தத் தகவலறிந்து விரைந்து வந்த காவலர்கள், மருத்துவர் சந்தீப் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சந்தீப் குமார் உயிரிழந்ததற்கான காரணம் என்ன? இது தற்கொலையா, கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த மர்ம மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Murder Suicide famous doctor found dead luxury car shocking incident that caused stir