பள்ளிக்குழந்தைகளை வைத்து அரசியல் விளம்பரமா...? முதலமைச்சரின் முகத்திரையை கிழித்த வானதி சீனிவாசன்...! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மற்றும் திருத்தணி அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் நடைபெற்றதாக கூறப்படும் பிறந்தநாள் நிகழ்வுகள், தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. பள்ளி மாணவர்களை அரசியல் விளம்பர நிகழ்வுகளில் பயன்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.அவர் தெரிவித்திருப்பதாவது,"செங்கல்பட்டு மற்றும் திருத்தணி அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில், முதல்-அமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வுகளில் தவெக நிர்வாகிகள் பள்ளிச் சிறார்களை வைத்து வாழ்த்து பாடல்கள் பாடச் செய்து, அதனை காணொளியாக பதிவு செய்து பரப்பியதாக வெளியாகியுள்ள தகவல்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன.

பள்ளி என்பது மாணவர்கள் அறிவைப் பெறும் புனிதமான கல்வி நிலையம். அது எந்த அரசியல் கட்சியின் புகழ் மேடையாகவோ அல்லது விளம்பர காட்சிகள் உருவாக்கும் தளமாகவோ மாறக்கூடாது.தவெக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் மக்கள் நலப்பணிகளில் காட்ட வேண்டிய அர்ப்பணிப்பை விட, காட்சிப்படுத்தும் அரசியலிலேயே அதிக கவனம் செலுத்தி வருவது வருத்தமளிக்கிறது.

இது ஜனநாயகத்தின் மாண்பையே கேள்விக்குறியாக்கும் செயல்.முதல்-அமைச்சர் சினிமா துறையிலிருந்து வந்தவர் என்பதற்காக, அந்த காட்சிமயமான கலாசாரத்தை பள்ளி மாணவர்களின் கல்வி சூழலுக்குள் கொண்டு வருவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.இத்தகைய செயல்களை சில அமைச்சர்கள் வெறும் முறையற்ற செயல் என்று குறிப்பிட்டு கடந்து செல்வது போதுமானதல்ல.

மாணவர்களின் கல்வி சூழலை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியவர்கள் மீது உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.மாணவர்களின் எதிர்கால நலனில் உண்மையான அக்கறை கொண்ட எந்த அரசும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமளிக்காது.

எனவே, பள்ளி வளாகங்களில் அரசியல் நிகழ்ச்சிகள், புகழ் பாடல்கள், விளம்பர காணொளி தயாரிப்புகள் போன்றவற்றுக்கு உடனடி தடை விதித்து, தமிழக அரசு தெளிவான வழிகாட்டுதல்களை அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு தனது அறிக்கையில் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is it political advertisement using school children Vanathi Srinivasan tore off Chief Minister veil


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->