ஒரு வருடம் இருக்கு.. "அதிமுகவில் மாற்றங்கள் நிகழலாம்".. சீர்காழியில் ஓ.பி.ஆர் சூசகம்..!!
OPR hint changes may happen in ADMK
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள சட்டநாதர் கோவிலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து தருமை ஆதீன குருமகா சன்னிதானத்திடம் ஆசி பெற்றார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது "திருச்சி மாநாடு ஒன்றரை கோடி தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அந்த தாக்கத்தை அதிமுகவில் ஏற்படுத்தும்.
அதிமுக பொதுச்செயலாளர் பிரச்சனை நீதிமன்றத்தில் இன்னும் முடிவடையவில்லை. இதே பொதுக்குழு தான் ஒருங்கிணைப்பாளரையும் தேர்ந்தெடுத்தது. அதிமுகவில் இருந்து யாரெல்லாம் வெளியே சென்றார்களோ அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும்.

இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் நான்தான். நான் அதிமுக கொடியையும், சின்னத்தையும் பயன்படுத்தக் கூடாது என்றால் ஒன்றரை கோடி தொண்டர்களும் பயன்படுத்தக் கூடாது என்று தான் அர்த்தம்.
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் மத்திய அரசு தலையிடவில்லை. நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. அதற்குள் அதிமுகவில் என்ன மாற்றங்கள் வேண்டுமானாலும் நிகழலாம்" என செய்தியாளர்கள் சந்திப்பில் சூசகமாக தெரிவித்துள்ளார்.
English Summary
OPR hint changes may happen in ADMK