அதெல்லாம் ஒன்றும் செய்யமுடியாது... ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு பேட்டி.! நாளை பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா?!  - Seithipunal
Seithipunal


அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அதை சமயத்தில் ஓபிஎஸ் அதிமுக பொது குழு கூட்டத்திற்கு தடைக்குரிய வழக்கின் தீர்ப்பும் நாளை காலை 9 மணிக்கு வரவுள்ளது.

இந்த தீர்ப்பில் அதிமுக பொது குழு கூட்டத்திற்கு ஏதேனும் நிபந்தனைகள் அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்த போதிலும் அதிமுகவின் பொதுக்குழுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுக்குழு நடைபெறும் இடத்தில் 16 ஸ்கேனர்களுடன் கூடிய அதிநவீன நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அதற்க்கு ஏற்ப அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு ஆர்.எஃப்.ஐ.டி தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொதுக்குழுவில் அனுமதி வழங்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், இன்று ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சற்றுமுன் அளித்துள்ள பேட்டியில், "ஒன்றரை கோடி தொண்டர்களால் தேர்வு செய்தவரை 2,600 நபர்களால் ஒன்றும் செய்துவிட முடியாது. நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPannerselvam SIDE AIADMK Vaithiyalingam SAY ABOUT MEET


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->