ஜனவரி 23 தமிழகம் வரும் பிரதமர் மோடி, சென்னை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்..!
On January 23 Prime Minister Modi will participate in a public meeting in Chennai
தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணியில் ஈடுப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களமிறங்கியுள்ளது. அணைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்வதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
அதிமுக - பாஜக கூட்டணி ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி வரும் ஜனவரி 23-ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க கூடிய தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான முதல் பொதுக்கூட்டம், வரும் ஜனவரி 23-ஆம் தேதி மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள அம்மா திடலில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதே நாளில் சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோடியுடன், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத் திடலை நயினார் நாகேந்திரன் இன்று மாலையில் ஆய்வு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் பங்கேற்கும் இந்த பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் பங்கெடுக்க செய்வதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுக்கிறது.
English Summary
On January 23 Prime Minister Modi will participate in a public meeting in Chennai