'ஓசி பயணம்' விவகாரம் - சுயமரியாதையை மீட்ட மூதாட்டி அதிமுக என்பதால் வழக்கா?! அதிமுகவின் சதித்திட்டமா?! - Seithipunal
Seithipunal


திமுக கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 'அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்' அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியது. அதன்படி தமிழகத்தில் சாதாரண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற நடைமுறை இருந்து வருகிறது.

இந்த அறிவிப்பு வெளியானது முதல் பேருந்தில் இலவசமாக பயணம் செய்த பெண்களை, நடத்துனர், ஓட்டுனர் அசிங்கமாக நடத்துவதாகவும், மற்ற சக ஆண் பயணிகளும் ஓசியில் பயணம் செய்து வர உங்களுக்கு எதுக்கு இருக்கை என்று அவமானப்படுத்துவதாக பல புகார்கள் எழுந்தது.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக அமைச்சர் பொன்முடி, இலவச பேருந்து பயணத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும், பெண்களின் தன்மானத்தையும், சுயமரியாதையும் அசிங்கப்படுத்தும் வகையில், "நீங்கள் ஓசியில்  தானே பயணம் செய்கிறீர்கள்" என்ற ஒரு கேள்வி அதிரவைத்தார்.

இதற்கிடையே, கோவை அரசு பேருந்து ஒன்றில் பயணம் செய்த மூதாட்டி ஒருவர் "நான் ஓசியில் இனி பயணம் செய்ய மாட்டேன். நான் ஓசியில் பயணம் செய்வதாக என்னை அசிங்கப்படுத்தி பேசுகிறார்கள்" என்று காசு கொடுத்து டிக்கெட் வாங்கி, தமிழகத்தில் முதல் ஆளாக தன் தன்மானத்தையும், சுயமரியாதையும் மீட்டெடுத்து உள்ள காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்நிலையில், கோவை அரசு பேருந்தில் இலவச டிக்கெட் வேண்டாம் என்று வாதம் செய்த மூதாட்டி அதிமுகவை சேர்ந்தவர் என்பதாலும், அவர் திட்டமிட்டு கட்சியினருடன் இணைந்து வீடியோ எடுத்ததாகவும், அரசின் திட்டத்திற்கு எதிராக சதித்திட்டம் திட்டியதாகவும் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் பாட்டி உட்பட 4 அதிமுகவின் மீதும் 4 வழக்கு பதிவு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OC Ticket Issue Police Case File


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->