ஓபிஎஸ் அன்று அப்படி செய்யவில்லை என்றால்... ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு பேட்டி!
O Panneerselvam ADMK Edappadi Palaniswami RB.Udayakumar
தலைமைப் பண்பிற்கான அறிகுறி துளியும் இல்லாத எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக தற்போது சிக்குண்டு கிடப்பதால், தொடர் தோல்வியைச் சந்தித்து வருவதாக, முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில், ஓபிஎஸ் விமர்சனங்களுக்கு ஆர்.பி. உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். அதில், கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக போட்டியிட்டவர் ஓ.பன்னீர்செல்வம். அப்போது அவர் கட்சியின் எதிர்காலம் மற்றும் தொடர்களின் நலனை நினைத்திருந்தால், இவ்வளவு சோதனைகள் இயக்கத்துக்கு வந்திருக்காது என்றார்.
இபிஎஸ் அவர்களின் தலைமைப் பண்பை விமர்சிப்பதற்கு முன், ஓபிஎஸ் அவர்களே தலைமை பண்புடன் செயல்பட்டார்களா என்பதை தாமே சிந்திக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். அதிமுக தொண்டர்கள் இபிஎஸின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டு, அவரை முதலமைச்சர் பதவிக்கு முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இபிஎஸ் முதலமைச்சராக இருந்த காலத்தில், ஓபிஎஸ் துணை முதலமைச்சராக இருந்தது நினைவுபடுத்தினார். இப்போது ஓபிஎஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள், அவரின் சொந்த இயலாமையை வெளிப்படுத்துவதாக உதயகுமார் விமர்சித்தார்.
English Summary
O Panneerselvam ADMK Edappadi Palaniswami RB.Udayakumar