இந்தியா கூட்டணியில் குழப்பம்!! காங்கிரஸ் மீது பாய்ந்த நிதீஷ் குமார்.!!
NitishKumar upset on congress party
5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் மும்முரமாக இருப்பதால் இந்தியா கூட்டணியை கட்டியெழுப்ப முடியவில்லை!!
பீகார் மாநிலம் பாட்னாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஏற்பாடு செய்திருந்த பாஜகவுக்கு எதிரான பேரணியில் பேசிய நிதிஷ் "ஐந்து மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் மிகவும் பிஸியாக இருப்பதாகத் தெரிகிறது.

இந்தியா கூட்டணியில் சமீப காலமாக பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. எவ்வாறாயினும், மாநிலத் தேர்தலுக்குப் பிறகு எதிர்கால நடவடிக்கையை முடிவு செய்ய எதிர்க்கட்சியான 'இந்தியா' கூட்டணி கட்சிகள் மீண்டும் கூடுவார்கள்.
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு, இந்தியா கூட்டணி கட்சிகள் மீண்டும் அமர்ந்து எதிர்கால நடவடிக்கையை முடிவு செய்வார்கள்" என பேசியுள்ளார். எதிர்கட்சிகளின் கூட்டணி உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த நிதிஷ்குமார் காங்கிரஸ் கட்சியின் மீது தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருப்பது இந்தியா கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
NitishKumar upset on congress party