தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எடுக்கப்படப் போகும் முக்கிய முடிவு என்ன...?
next big thing Tamil Nadu politics What main decision that taken at meeting TVk MLAs
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளை வசப்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவால் அதன் பலம் தற்போது 112 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு இன்னும் எட்டப்படாததால், அரசியல் களம் அதிர்வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

ஆட்சியமைப்பதற்கான அழைப்பை பெறும் நோக்கில் தவெக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அர்லேகரை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
எனினும், பெரும்பான்மையை நிரூபிக்கும் 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதங்கள் இன்றி ஆட்சியமைக்க அழைப்பு வழங்க இயலாது என ஆளுநர் உறுதியாக தெரிவித்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, மீதமுள்ள 6 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் முயற்சியில் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தவெக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
இந்த சந்திப்புகளின் முடிவுகள் இன்று தமிழக அரசியல் திசையை தீர்மானிக்கக்கூடிய முக்கிய கட்டமாக பார்க்கப்படுகின்றன.மற்றொரு புறம், திமுகவும் அதிமுகவும் தங்களது எம்.எல்.ஏ.க்களுடன் தனித்தனியாக அவசர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன.
அதிமுக தலைமையிலான ஆட்சிக்கு திமுக வெளிப்புற ஆதரவு வழங்கும் சாத்தியக்கூறுகள் குறித்து அரசியல் வளாகங்களில் பரபரப்பாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் தமிழகம் முழுவதும் அரசியல் பரபரப்பு உச்சத்தை தொட்டுள்ளது. காலை 9 மணிக்கு நடைபெறும் தவெக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தில் எத்தகைய தீர்மானம் எடுக்கப்படும்? விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய்க்கு கரம் கொடுக்குமா? அல்லது தமிழக அரசியலில் புதிய திருப்பம் உருவாகுமா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக நிலவி வருகிறது.
English Summary
next big thing Tamil Nadu politics What main decision that taken at meeting TVk MLAs