அதிமுக கூடாரத்தில் அடுத்த அதிரடி...! - ஜூலை 1-ல் மகளிரணி நிர்வாகிகளின் மெகா கூட்டத்தை கூட்டும் எடப்பாடி பழனிசாமி...!
Next action AIADMK tent Edappadi Palaniswami convene mega meeting women wing executives July 1
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கழக மகளிர் அணியின் செயல்பாடுகளை வலுப்படுத்தவும், கழக வளர்ச்சிப் பணிகளில் மகளிரின் பங்களிப்பை மேலும் தீவிரப்படுத்தவும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கழக மகளிர் அணி மாநில நிர்வாகிகள், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்கள், அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழக இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மகளிர் செய்தித் தொடர்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூலை 1-ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணியளவில் சென்னை இராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் கழக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி நேரில் பங்கேற்று, மகளிர் அணியின் எதிர்கால செயல்திட்டங்கள் மற்றும் கழக வளர்ச்சி குறித்த முக்கிய ஆலோசனைகளை வழங்க உள்ளார்.
மேலும், கழகத்தின் மூத்த நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனைகளை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.எனவே, மேற்கண்ட பொறுப்புகளில் செயல்பட்டு வரும் அனைத்து மகளிர் நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்று கூட்டத்தை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
English Summary
Next action AIADMK tent Edappadi Palaniswami convene mega meeting women wing executives July 1