புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் திறப்பு எதிர்ப்பு | ஏன் இந்த வழக்கு? அபராதம் விதிக்கட்டுமா? உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் ஜெய் சுகேன் என்பவர் ரிட்  மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அவரின் அந்த மனுவில், இந்திய அரசியல் சாசன சட்டப்பிரின் கீழ், ஒரு நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளையும் கூட்டுவதற்கு அல்லது அந்தக் கூட்டத்தை ரத்து செய்வதற்கும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இருக்கின்றது.

எனவே, நாடாளுமன்றத்தை இயக்கக்கூடிய மிக முக்கிய நபராக இருக்க கூடிய குடியரசுத் தலைவர் தான் புதிய நாடாளுமன்றத்தை திறக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், மனுதாரரிடம் உங்களுடைய இந்த வழக்கை நீங்கள் தாக்கல் செய்திருப்பதற்காக உங்களுக்கு நாங்கள் அபராதம் விதிக்கட்டுமா? என்று கேள்வி எழுப்பினர்.

இதனை தொடர்ந்து வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், மனுதாரர் தங்களது வாதத்தை முன்வைக்க அனுமதி அளித்தார்.

அப்போது, மனுதாரர் பல்வேறு விவகாரங்களை தெரிவித்த போது, நீதிபதிகள் உங்களின் நோக்கம் என்ன? இந்த வழக்கை தொடர்வதற்கான காரணம் என்ன? எதற்காக இந்த வழக்கை தொடர்ந்தீர்கள்? என்பது குறித்து கூறுங்கள் என்று நீதிபதிகள் கேட்டனர்.

அப்போது மனுதாரர் அதற்க்கு பதில் அளிக்காமல், நீங்கள் இந்த வழக்கை வேண்டுமானால் தள்ளுபடி செய்து கொள்ளுங்கள், இல்லையென்றால் நான் மனுவை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். 

இவ்வளவு நேரம் வாதாடிய பிறகு இந்த வழக்கை நீங்கள் வாபஸ் பெறுகிறேன் என்று கூறினால் என்ன அர்த்தம்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதனை தொடர்ந்து இந்த வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New Parliament open case SC Judgement


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->