தமிழக அரசியலில் 'புதிய ரத்தம்'...! தம்பி விஜய்யின் அரசியல் பயணத்திற்கு சீமானின் நெகிழ்ச்சியான வாழ்த்து...!
New blood Tamil Nadu politics Seeman heartfelt wishes brother Vijay political journey
தமிழக அரசியலில் புதிய மாற்றத்தின் முகமாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், இன்னும் சற்று நேரத்தில் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், சமூக அமைப்புகள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு தொடர்ச்சியாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் தனது வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டு முதல்வராக பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு பெரிய அரசியல் சக்திகளுக்கு அப்பாற்பட்ட ஒரு புதிய கட்சி, பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழக ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் தருணம் மகிழ்ச்சியை அளிக்கிறது” என அவர் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
New blood Tamil Nadu politics Seeman heartfelt wishes brother Vijay political journey