நீட் தேர்வு முறையே ஒரு மோசடியானது தான்...! நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் வெடித்த உதயநிதி ஸ்டாலின்...! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இந்தத் தேர்வு முறையே ஒரு மோசடி என்பதை வெளிப்படுத்தும் வகையில் மு.க.ஸ்டாலினின் கட்டுரை அமைந்துள்ளதாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,"நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை மட்டும் சுட்டிக்காட்டவில்லை; நீட் தேர்வு முறையே ஒரு மோசடி என்பதைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிக்கை.

மருத்துவக் கல்வி மீது கனவு காணும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் கிராமப்புற மாணவர்களின் கனவுகளைச் சிதைப்பதே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளின் உண்மையான நோக்கமாக உள்ளது.

குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளுக்கு தடையாக நிற்கும் இந்தத் தேர்வு முறையை எதிர்த்து, அந்தத் தடைகளைத் தகர்க்கும் போராட்டத்தில் தி.மு.க. எப்போதும் முன்னணியில் நிற்கும்.

மாணவர்களின் கல்விக் கனவுகளுக்கு எதிராக நிற்கும் எந்தத் தடையையும் உடைக்கும் போராட்டத்தில் தி.மு.க. தொடர்ந்து உறுதியுடன் செயல்படும்" என்று  உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NEET exam itself scam Udhayanidhi Stalin once again lashes out against NEET exam


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->