காவல்துறையின் அத்துமீறல்களை அடக்கி சட்டம் ஒழுங்கை சீர்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: நயினார் நாகேந்தரன் வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர், இனியாவது காவல்துறை மற்றும் குற்றவாளிகளின் அத்துமீறல்களை அடக்கி சட்டம் ஒழுங்கை சீர்படுத்தி தமிழக மக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என தமிழக பா.ஜ.,தலைவர் நயினார் நாகேந்தரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளதாவது:- காவல்துறை அத்துமீறல்களுக்கு திராவிட மாடல் சூட்டிய பெயர்'வழுக்கும் கழிப்பறைகள்!'

'இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை அடக்கும் போர்வையில். காவல்துறையின் மிருகத்தனமான அத்துமீறல்களும், எண்ணற்ற லாக்-அப் மரணங்களும் தான் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை. சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் 304 கைதிகளுக்கு எறும்பு முறிவு காயங்கள் ஏற்பட்டதற்கு வழுக்கும் கழிப்பறைகளே காரணம் என திமுக அரசால் வாய்க்கூசாமல் சாக்கு சொல்லப்பட்டது. கடந்த 2022-ஆம் ஆண்டு உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் வந்து குற்றவாளிகளின் பற்களை உடைத்து அத்துமீறலில் ஈடுபட்டபோது, திமுக அரசு கண்மூடி வாய் பொத்தி இருந்தது.

திமுக ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே (2021-22) மொத்தம் 109 லாக்-அப் மரண வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 7O ஆயிரத்துக்கும் அதிகமாகும். மேலும் காவல்துறையின் வன்முறையால் காவல்நிலையத்தில் வைத்தே கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னையில் 25 வயது இளைஞர் ஒருவரும், திருவண்ணாமலையில் 47 வயது நபர் ஒருவரும், 2023-ஆம் ஆண்டு தென்காசியில் 23 வயது தலித் இளைஞரும் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஒரு புறம் காவல்துறையின் அத்துமீறல் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. மறுபுறம் போதைப்பொருள் துஷ்பிரயோகம், பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் சாதிய வன்முறை என குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இப்படி சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரிக்கக் காரணம் காவல்துறையைத் தி.மு.க., தனது சொந்த ஏவம் வேலைகளுக்குப் பயன்படுத்துவதுதான் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர், இனியாவது காவல்துறை மற்றும் குற்றவாளிகளின் அத்துமீறல்களை அடக்கி சட்டம் ஒழுங்கை சீர் செய்வாரா என்பதே மக்களிடம் எஞ்சியிருக்கும் கடைசி எதிர்பார்ப்பு. எனவே, மேடை தோறும் ' அமைதிப்பூங்கா தமிழகம்' என முழங்குவதில் மட்டும் ஆர்வம் காட்டும் திமுக அரசு, முதலில் தமிழக மக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க முனைய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.' என்று நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nayinar Nagendaran urges that police abuses should be curbed law and order should be improved and the safety of the people should be ensured


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->