முதல்வர் விஜய்யுடன் MRF தலைவர் திடீர் சந்திப்பு...! கையில் 'பேட்' உடன் வைரலாகும் லேட்டஸ்ட் க்ளிக்...!
MRF Chairman surprise meeting Chief Minister Vijay Latest click goes viral bat hand
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் எம்.ஆர்.எப். நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகிகள் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பில், எம்.ஆர்.எப். நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே.எம். மம்மன், துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அருண் மம்மன், மேலாண்மை இயக்குநர் ராகுல் மம்மன் ஆகியோர் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் நிறுவனத்தின் தற்போதைய செயல்பாடுகள், உற்பத்தித் துறை விரிவாக்கம் மற்றும் ஏற்றுமதி பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதலீட்டு திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சருடன் விரிவாக கலந்துரையாடினர்.

அப்போது, முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த நிறுவன நிர்வாகிகள், நினைவுப் பரிசாக எம்.ஆர்.எப். கிரிக்கெட் மட்டையையும் வழங்கினர்.
இந்த சந்திப்பு தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு சூழல் தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.இதனைத் தொடர்ந்து, கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் ஜின்னா ரபிக் அகமது, முதல்-அமைச்சர் விஜயை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அந்த சந்திப்பில், தமிழ்நாட்டில் அந்நிறுவனம் மேற்கொண்டு வரும் முதலீட்டு திட்டங்கள், தொழில் விரிவாக்க நடவடிக்கைகள் மற்றும் தோல் அல்லாத காலணி உற்பத்தித் துறையில் நிறுவனத்தின் பங்களிப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
MRF Chairman surprise meeting Chief Minister Vijay Latest click goes viral bat hand