JEE தேர்வு எழுதிய மாணவர்களே அலர்ட்...! மே 25-ல் வெளியாகிறது தாற்காலிக ஆன்சர் கீ...! - செக் செய்வது எப்படி...?
Alert students who have written JEE Provisional answer key released May 25th How check
இந்தியாவின் உயரிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களாக விளங்கும் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாம் எனப்படும் ஜே.இ.இ. தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.இந்த தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக ஜே.இ.இ. மெயின் தேர்வும், அதனைத் தொடர்ந்து ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வும் நடத்தப்படுகிறது.

இதில், ஜே.இ.இ. மெயின் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதல் 1.5 லட்சம் இடங்களுக்குள் வரும் மாணவர்களுக்கு மட்டுமே ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வை எழுத அனுமதி வழங்கப்படுகிறது.சிபிஎஸ்இ நடத்தி வரும் இந்த தேர்வின் நடப்பாண்டு ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு கடந்த மே 17ஆம் தேதி கணினி வழி தேர்வு முறையில் நாடு முழுவதும் நடைபெற்றது.
இந்த சூழலில், தேர்வின் தாள் 1 மற்றும் தாள் 2க்கான தற்காலிக விடைக்குறிப்பு வரும் மே 25ஆம் தேதி காலை 10 மணிக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான jeeadv.ac.in தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்ய விரும்பும் மாணவர்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைந்து தங்களது லாகின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
அதன் பின்னர் திறக்கும் பக்கத்தில் ஜே.இ.இ. அட்வான்ஸ் தற்காலிக விடைக்குறிப்புக்கான இணைப்பு வழங்கப்படும். அந்த இணைப்பின் மூலம் விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தற்காலிக விடைக்குறிப்பில் இடம்பெற்றுள்ள பதில்கள் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், மாணவர்கள் அதனை பதிவு செய்ய ஒரு நாள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மே 26ஆம் தேதிக்குள் தங்களது profile பக்கத்தில் வழங்கப்படும் நடைமுறைகளை பின்பற்றி ஆட்சேபனைகளை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் அளிக்கும் ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்ட பின்னர், இறுதி விடைக்குறிப்பு ஜூன் 1ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், அதே நாளில் தேர்வு முடிவுகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வில் தேவையான மதிப்பெண்களைப் பெறும் மாணவர்கள், நாட்டின் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து உயர் கல்வியை தொடர தகுதி பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Alert students who have written JEE Provisional answer key released May 25th How check