நாடாளுமன்றத் தேர்தலுக்கு அச்சாரம்.. அழைப்பு விடுத்த காங்கிரஸ் தலைமை.. மு.க ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!!
MKStalin participating in Karnataka CM swearing in ceremony
கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா நாளை மறுநாள் பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் பெங்களூருவில் முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கர்நாடக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சித்தராமையா ஆகியோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

முதல்வர் ஸ்டாலினுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள இருந்த செய்தி குறிப்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பெங்களூரில் நடைபெறும் கர்நாடக மாநில முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அதற்கான பயண திட்ட பணிகளை முதல்வரின் தனிச் செயலாளர்கள் ஆரம்பித்துள்ளனர். முதல்வர் மு.க ஸ்டாலின் உடன் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சில மூத்த அமைச்சர்களும் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போன்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடும் நிகழ்வாக கர்நாடக மாநில முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தை நிறைவு செய்து கொண்ட தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சனிக்கிழமை இரவு மீண்டும் சென்னை திரும்ப வாரு என தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
MKStalin participating in Karnataka CM swearing in ceremony