கொளத்தூரில் படுதோல்வி; தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்..! - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு, தவெக வேட்பாளரிடம் 8795 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளார். இந்நிலையில், இன்று கொளத்தூர் தொகுதிக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்துள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் திமுக எம்எல்ஏ சேகர்பாபுவுடன், வாகனப் பேரணியாக சென்றபடி வாக்காளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். 

2011-ஆம் ஆண்டு முதல் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்றிருந்த மு.க.ஸ்டாலின், இம்முறை தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் படுதோல்வியடைந்துள்ளார். ஜெயலலிதாவுக்குப் பிறகு முதல்வராக இருந்தபோதே மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்துள்ளார்.

இந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றிபெற்று விஜய் தலைமையிலான தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியை பிடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MK Stalin personally thanked the people of the Kolathur constituency


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->