'முதல் தேர்தலிலேயே சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதற்கு தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாழ்த்துக்கள்'; நயினார் நாகேந்திரன்..! - Seithipunal
Seithipunal


''தாங்கள் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதற்கு தமிழக வெற்றிக் கழகத்துக்கு என் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது;

''2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உறுதுணையாக இருந்து ஆதரவு வழங்கிய தமிழக மக்களுக்கும், கூட்டணியின் வெற்றிக்காக அயராது பாடுபட்ட அனைத்து தோழமைக் கட்சி தொண்டர்களுக்கும், மேலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நம் தமிழக பாஜகவின் அனைத்து காரியக்கர்த்தாக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தேர்தலில், வரலாறு காணாத அளவில் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் உற்சாகத்துடன் தன்னார்வமாக வந்து வாக்களித்து, ஜனநாயகத்தின் மீதான தங்கள் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்காக அவர்களுக்கு என் இதயம் கனிந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், தாங்கள் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதற்கு தமிழக வெற்றிக் கழகத்துக்கு என் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congratulations to Tamil Nadu Victory Party for showing excellent performance in the first election Nainar Nagendran


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->