'மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றிக்கு இந்துக்களின் வாக்குகளை ஒருங்கே பெற்றதும், சிறுபான்மை வாக்குகளை பிளவுப்பட்டதும் தான் காரணம்'; உமர் அப்துல்லா..!
Omar Abdullah states that the consolidation of Hindu votes was the reason behind the BJPs victory in West Bengal
மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரல் 23 மற்றும் 29-ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று வாக்கு எண்னிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 207 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல் முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெறும் 80 இடங்களில் வென்று, ஆட்சியை இழந்துள்ளது. காங்கிரஸ் - 02, ஏஜெயுபி - 02, மார்க்சிஸ்ட் - 01, ஏஐஎஸ்எஃப் - 01 இடத்திலும் வெற்றிப் பெற்றன.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்றது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது, மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் தேர்தல் ஆணையம் அதன் நடுநிலை தன்மையை இழந்துள்ளது என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதாவது, பாஜகவுக்கு ஆதாயம் அளிக்கும் வகையில் தகுதி வாய்ந்த வாக்காளர்களை நீக்கியுள்ளதாகவும், அதன் மூலம் அம்மாநிலத்தில் பாஜக வெற்றிக்கு குறிப்பிடத்தக்க வகையிலான தேர்தல் ஆணையம் முக்கிய பங்காற்றியதாக விமர்சித்துள்ளார்.
மேலும், இந்துக்களின் வாக்குகளை ஒருங்கே பெற்றதும், சிறுபான்மை வாக்குகளை பிளவுப்பட்டதும் தேர்தலில் பாஜக வெற்றிக்கு முக்கியம் காரணம் என தான் கருதுவதாக கூறியுள்ளார்.
அத்துடன், தேர்தல் அரசியலில் இந்தியா கூட்டணியின் பங்கு என்ன என்பது குறித்து தெளிவுப்படுத்த வேண்டும் என்றும், ஏனெனில், எதிர்க்கட்சி கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்கு மட்டுமானதா அல்லது மாநிலத் தேர்தல்களுக்கும் அது நீட்டிக்கப்பட்டதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
English Summary
Omar Abdullah states that the consolidation of Hindu votes was the reason behind the BJPs victory in West Bengal