'தவெக அரசை கவிழ்க்கும் தைரியம் திமுக உள்ளிட்ட எந்த கட்சிக்கும் கிடையாது'; ஹெச்.ராஜா பேட்டி..! - Seithipunal
Seithipunal


பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இன்று காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'தமிழகத்தில் அமையப்போகும் தவெக அரசை கவிழ்க்கும் தைரியம் திமுக உள்ளிட்ட எந்த கட்சிக்கும் கிடையாது' என அதிரடியாக கூறியுள்ளார்.

அத்துடன், ஐந்து மாநில தேர்தல்களில் பாஜக கூட்டணி 03 மாநிலங்களில் முழு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது சாதனை எட்ன்றும், தமிழகம், மேற்கு வங்கத்தில் ஒழிக்கப்பட வேண்டிய சக்திகள் ஒழிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாதகவை பொறுத்தவரை ஏற்கெனவே இதேநிலையில் தான் இருந்தது. இதுகுறித்து புதிதாக சொல்ல ஒன்றுமில்லை என்று கூறியுள்ளதோடு, மாற்றத்துக்காக தவெகவுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். திமுக, அதிமுக இல்லாத ஒரு கட்சி தமிழகத்துக்கு அவசியம் என மக்கள் உணர்ந்து இருக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர். தவெக தலைவர் விஜய்க்கு எனது வாழ்த்துகள். குறைந்த இடங்களே தேவைப்படுவதால், தொங்கு சட்டப்பேரவை என்று சொல்ல முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தவெக அரசை கவிழ்க்கும் தைரியம் திமுக உள்ளிட்ட எந்தக் கட்சிக்கும் கிடையாது. அதனால், இதனை தொங்கு சட்டப்பேரவை என்று சொல்வதைவிட தவெக ஆதரவு சட்டப்பேரவை என்றுதான் சொல்ல வேண்டும் என்று கூறியதோடு, தமிழகத்துக்கு மத்திய அரசின் முழு ஆதரவு உண்டு எனவும், பாஜகவின் சரிவு குறித்து நிர்வாகிகள் குழு கூடி ஆலோசனை செய்யும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மேலும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

H Raja asserts that no party including the DMK has the courage to topple the TVK government


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->