'வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் தவெக சரித்திர வெற்றி'; செங்கோட்டையன் பெருமிதம்..! - Seithipunal
Seithipunal


'வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட வழங்காமல் முதல் தேர்தலில் சரித்திர வெற்றி பெற்றுள்ளோம்' என்று தவெகவின் செங்கோட்டையன் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

மேற்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் பலர் இன்று, தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர். அப்போது பீளமேடு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கோபி தொகுதி எம்எல்ஏ செங்கோட்டையன் பேசும்போது கூறியதாவது;

ஓர் இயக்கம் வளர வேண்டும் என்றால் தியாகம் செய்ய வேண்டும் என்றும், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா தியாகத்தால் வளர்ந்த இயக்கம் தற்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  தவெக மக்கள் சக்தியாக தற்போது மாறியிருக்கிறது என்றும், வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட வழங்காமல் முதல் தேர்தலில் சரித்திர வெற்றி பெற்றுள்ளோம் என்று பெருமிதமாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விஜய்யை மக்கள் நேசிக்கிறார்கள். நேசிக்கின்ற மக்களுக்கு அவர் உறுதுணையாக இருப்பார். உறுதியாக உயரிய பார்வை, மனிதநேயம் அவரிடத்தில் இருக்கிறது. அதனை நீங்கள் பார்ப்பீர்கள் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sengottaiyan expresses pride that the TVK has achieved a historic victory without giving even a single rupee to the voters


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->