முதல் தேர்தலிலேயே சரித்திர வெற்றி; விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ..! - Seithipunal
Seithipunal


தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அக்கட்சியின் தலைவர் விஜய்யின் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

''தளபதி விஜய், நடிகராக மாபெரும் வெற்றிகள் பல கண்டு, வசூல் மன்னனாக தமிழ் சினிமாவில் பல வருடங்கள் கொண்டாடப்பட்டு வந்தவர். இரண்டு வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் அடியெடுத்து வைத்த போது, தமிழ் சினிமாவிற்கு அது பெரிய இழப்பாக அனைவராலும் பார்க்கப்பட்டது.

 ஆனால், அது தமிழ் நாட்டுக்கே வரப்பிரசாதமாக மாறி, இன்று தனித்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே, தனிப்பெரும் வெற்றியை பெற்று, வரலாற்று சாதனையை புரிந்துள்ளார்.... 

புரட்சி தலைவர் எம்ஜிஆர்-க்கு பின் தமிழ் சினிமாவிலிருந்து அரசியல் சென்று நேரடியாக களம் கண்டு, வெற்றி அடைந்த மாபெரும் சாதனையாளராக இன்று தளபதி விஜய் உருவாகியிருக்கிறார்.

திரு விஜய் அவர்களின் இந்த வெற்றியை இன்று உலகமே கொண்டாடுகிறது. அந்த கொண்டாட்டத்தில் தமிழ் சினிமாவை சார்ந்த அனைவரும் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

திரு விஜய் அவர்கள், தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று. ஒரு சிறப்பான ஆட்சியை மக்களுக்கு கொடுப்பார் என்று கோடிக்கணக்கான மக்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது. அதே போல், தமிழ் சினிமாவிலிருந்து வந்து பல சாதனனைகளை புரிந்து இன்று அரசியல் உலகிலும் பல சாதனனைகள் புரிய தொடங்கியுள்ள திரு விஜய் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு பல விதங்களில் துணை இருப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

அவரின் தலைமையில் உருவாகும் புதிய அரசு, தமிழ் சினிமாவில் தற்போது உள்ள பிரச்சனைகளை களைந்து, ஒரு சிறப்பான எதிர்காலத்தை இந்த துறையில் உள்ள அனைவருக்கும் உருவாக்குவார்கள் என்று பெரிதும் நம்புகிறோம். 

தமிழ் நாட்டு அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ள திரு,விஜய் அவர்கள். முதலமைச்சராக மாபெரும் சாதனைகளை செய்து, மக்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்க, தமிழ் திரைப்பட  நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.'' என்று குறிப்பிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Tamil Film Producers Council has extended its congratulations to Vijay on his electoral victory


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->