மேற்கு வங்கம், அசாம் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி; பாஜகவினருக்கு டிடிவி தினகரன் வாழ்த்து..! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கம், அசாம் தேர்தல்களில் பாஜகவுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கும் புதுச்சேரியில் தேஜ கூட்டணி மீண்டும் வெற்றிப்பெறுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு டிடிவி தினகரன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; 

''மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தனது அயராத உழைப்பால் பதிவு செய்திருக்கும் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்கள் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சிக்குச் சான்றாகக் கிடைத்திருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, அந்தந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் வலுவான அடித்தளமாக அமையட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TTV Dhinakaran congratulates the BJP on its historic victory in the West Bengal and Assam elections


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->