அமைச்சராக பதவியேற்ற வன்னி அரசு; ''சிறப்பா பணியாற்றுவீங்கனு உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு''; மு.க. ஸ்டாலின் வாழ்த்து..! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில், பாபநாசம் தொகுதி ஐ.யூ.எம்.எல். எம்.எல்.ஏ. ஷாஜகானுக்கும், திண்டிவனம் தொகுதி வி.சி.க. எம்.எல்.ஏ., வன்னி அரசுக்கும், அமைச்சர்களாக தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணமும் ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள், விசிக தலைவர் திருமாவளவன், ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, வன்னி அரசு மற்றும் ஷாஜகான் ஆகியோருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

 இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; ''அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் வன்னி அரசுக்கும், ஷாஜஹானுக்கும் எனது வாழ்த்துகள்'' எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் வன்னி அரசுக்கு இன்று பிற்பகல் திமுக மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் பேசியுள்ளார். இது குறித்து அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;

''வாழ்த்துகள் வன்னி அரசு; இந்த புதிய பொறுப்பில் சிறப்பா பணியாற்றுவீங்கனு உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.

தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், இன்று மதியம் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு  உள்ளன்போடு வாழ்த்தினார். சமூக நீதி களத்தில் வீரியமாக செயல்படுவதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் வாழ்த்து எனக்கு பெரும் ஊக்கமாக அமையும் என்று நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தேன்'' எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MK Stalin Congratulates Vanni Arasu on Assuming Office as Minister


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->