தவெக கூட்டணியில் மாநிலங்களவை எம்.பி. ஆகிறாரா..? காங்கிரசின் பிரவீன் சக்கரவர்த்தி..? - Seithipunal
Seithipunal


சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுகவின் சி.வி.சண்முகம், கடந்த 07 ஆம் தேதி தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அதேப்போன்று மகாராஷ்டிராவில் அஜித்பவார் மறைவையடுத்து, பாராமதி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற அவரது மனைவி சுநேத்ரா பவார், கடந்த 06 ஆம் தேதி தனது மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்தார்.

காலியாக உள்ள இந்த இரண்டு இடங்களுக்கும் ஜூன் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, 10 மாநிலங்களைச் சேர்ந்த 24 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுடன் நிறைவடைகிறது.

கர்நாடகாவில் மல்லிகார்ஜுன் கார்கே, தேவகவுடா, மத்திய பிரதேசத்தில் திக்விஜய் சிங், ஜார்ஜ் குரியன் ஆகியோரின் பதவிக்காலங்கள் முடிவடையவுள்ளன. காலியாகும் இந்த மாநிலங்களவை இடங்களுக்கும் ஜூன் 18-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான வேட்பு மனுக்களை ஜூன் 01 முதல் 08 வரை தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மை உள்ளவர்களே மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்ற பட்சத்தில், தமிழ்நாட்டில் காலியாகும் ஒரு மாநிலங்களவை இடத்தை தவெக கைப்பற்றி நாடாளுமன்றத்தில் முதல் அடி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மாநிலங்களவை எம்.பி. சீட்டை கூட்டணியில் இருக்கும் காங்கிரஸுக்கு ஒதுக்குமாறு தவெகவிடம் அக்கட்சி மேலிடம் கோரிக்கையாக வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதனை ஏற்றுக்கொண்ட தவெகவுக்குள் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும், தவெக – காங்கிரஸ் கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த பிரவீன் சக்ரவர்த்தியை நிறுத்தவும் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is Congress Praveen Chakravarty Set to Become a Rajya Sabha MP in the TVK Alliance


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->