நாட்டிலேயே சிறந்த முதல்வர் இவர் தான்.! 100ல 79 பேர் பாராட்டு.! 'அந்த' அமைப்பு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாட்டில் சிறந்த முதல்வர்., முக ஸ்டாலின் தான் என்று 'சி.என்.ஒ.எஸ். ஒபினியோம்' என்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 

அந்த அமைப்பிப்பு நடத்திய கணக்கெடுப்பில், நாட்டில் சிறந்த 5 முதல்-அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாட்டிலேயே மிகவும் மக்கள் செல்வாக்கு பெற்ற முதல்வராக முக ஸ்டாலின் திகழ்கிறார்.

நாங்கள் தமிழகத்தில் எடுத்த கணக்கெடுப்பின் படி, 100 பேரில் 79 சதவீதம் பேர், ஸ்டாலின் தலைமையில் நிம்மதி அடைந்து இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

அதே சமயத்தில் 12 சதவீதம் பேர் அவருடைய செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதன்படி, தமிழக முதல்வர் ஸ்டாலின் நிகரப்புள்ளிகள் 67 பெற்று நாட்டிலேயே தலைசிறந்த மக்கள் செல்வாக்கு பெற்ற முதலமைச்சராக முதலிடம் பெற்று உள்ளார்.

இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளார். அவரை தொடர்ந்து, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மூன்றாவது இடம் பெற்றுள்ளார். 

நான்காவது இடத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும்,  அசாம் முதல்வர் ஹேமந்த் பிஸ்வா சர்மா ஐந்தாவது இடத்திலும் உள்ளார்." என்று அந்த சி.என்.ஓ.எஸ்.ஒபினியோம் என்ற அமைப்பு தெரிவித்து உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin best cm in india


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal