முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்த மு.க அழகிரி...! - Seithipunal
Seithipunal


நேற்று காலை நடைபயிற்சி சென்றபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டனர்.இதில் பெரிய அளவில் அவருக்கு பிரச்சனை ஏதும் இருப்பதாக கண்டறியப்படவில்லை.

மேலும், 2 நாட்கள் ஓய்வெடுத்தால் போதும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதனால் நேற்று முழுவதும் அப்பல்லோவிலிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று காலை அருகிலுள்ள தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சில மருத்துவ பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை முடிந்ததும் மீண்டும் ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு திரும்பினார்.

அங்கு முதலமைச்சர் 2 நாட்கள் ஓய்வில் இருப்பார் எனத் தகவல் வெளிவந்துள்ளது.இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க அவரது சகோதரர் மு.க.அழகிரி அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

அங்கு முதலமைச்சரை சந்தித்த மு.க.அழகிரி அவரது உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MK Alagiri met Chief Minister MK Stalin in person and inquired about his health


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->