முதலமைச்சர் வாகனத்தில் தொங்கியபடி சென்றது மேயர் ப்ரியாவின் துணிச்சல் - அமைச்சர் சேகர் பாபு விளக்கம்.! - Seithipunal
Seithipunal


நேற்று முன்தினம் மாண்டஸ் புயல் மற்றும் வெள்ளமழை பாதிப்புகள் குறித்து சென்னை கொட்டிவாக்கம் பாலவாக்கம் பகுதிகளில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து காசிமேடு மீன் பிடி துறைமுகத்துக்கு சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் சேதம் அடைந்த படகுகளை பார்வையிட்டார். மேலும் மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைச்சர் கே என் நேரு சேகர் பாபு பாலசுப்ரமணியன் உடன் காசிமேட்டிற்கு தனது காண்வாயில் சென்ற போது சென்னை மேயர் பிரியா மற்றும் ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் முதலமைச்சர் கான்வாயில் தொங்கியபடி சென்றனர்.  

இந்த நிலையில் தற்போது இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிய நிலையில் பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் மேயர் ப்ரியா முதலமைச்சர் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி பயணம் செய்த விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மேயர் பிரியா முதலமைச்சர் கன்வாய் வாகனத்தில் தொங்கிய படி சென்றது அதிகார துஷ்பிரயோகம் அல்ல. அதை அவரது துணிச்சலான செயலாக பார்க்க வேண்டும்.

மேலும், ஆய்வின் போது முதலமைச்சருடன் செல்ல வேண்டும் என்பதற்காக சென்னை மேயர் பிரியா துணிச்சலுடன் முதல்வர் பாதுகாப்பு வாகனத்தில் ஏறினார் என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Sekar Babu speech about Mayor Priya footboard controversy


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->