விரைவில் தமிழக கோவில்களிலும் திருப்பதி கோயில் போன்ற நடைமுறை; அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்து சமய அறநிலையத் துறை செயல்பாடுகளை முன்னாள் அமைச்சர் சேகர்பாபு வேவு பார்ப்பதாக விமர்சனம் செய்துள்ளதோடு, தகவல் கொடுக்கும் அதிகாரி மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் குறிப்பிட்டுள்ளதாவது;

ரேஷன் அரிசி தான் சாப்பிடுகிறேன் என சட்டமன்ற உறுப்பினர் கே.என். நேரு கூறுவது மகிழ்ச்சியாக இருந்தாலும், பல இடங்களில் பொது மக்கள் ரேஷன் அரிசியை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டுள்ளது. அதனையெல்லாம் சரிசெய்து தரமான பொருட்களை வழங்க முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஜனநாயக முறைப்படி நடைபெறும் சட்டமன்றத்தில் அனைவருக்குமான கேள்விக்கு பதிலளிக்கப்பட்டு, சில வார்த்தைகள் இருந்தால் நீக்குவது மரபு என்று குறிப்பிட்டுள்ளதோடு, கடந்த ஆட்சியில் ஜனநாயகத்திற்கு இடமில்லை என்பது தெரியும், அதனால் இந்த வார்த்தைகளை கேட்டிருக்க மாட்டீர்கள். இந்த ஆட்சியில் ஜனநாயகம் முக்கிய பங்காற்றுகிறது என்பதால் இதுபோன்று நேரிடுகிறது. சபாநாயகர் அவரது பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார் என்று சுட்டிக்காட்டி பேசினார்.

மேலும், திமுக காரர்கள் பக்கம் கேமராவை திருப்பினால் எப்படி ரிலீஸ் போடமுடியும் என்பது மக்களுக்கு தெரியும் என்றும், முதன்முறையாக சட்டமன்றத்தில் வந்த உறுப்பினர்கள் நாங்கள் மாண்புடன் கருத்துக்களை முன்வைக்கிறோம். ஆனால், இவர்கள் எழுந்து நின்று கூச்சல் போடுவதும், வரிக்கு வரி கூச்சல் போடுவதும், கத்துவது, ஓடுவது மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பின் வரிசையில் அமர்ந்து கொண்டு தற்போதைய அமைச்சர்கள் பேசும்போது தகாத வார்த்தைகளில் பேசுவது சட்டமன்றத்தை சந்தை நடத்தும் இடமாக செயல்பட்டு வருகிறார்கள் என்று விமர்சித்துள்ளதோடு, அவர்களுக்கு முதலில் மாண்பு இருக்கிறதா என்பது தெரிய வேண்டும் என்று கூறினார்.

அத்துடன், நாங்கள் ஏதேனும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை என்றும், முதல்வர் அவர்களை நம்பி வந்தவர்கள் எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்வார் என்றும், பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான, மற்றும் சிதலமடைந்த கோவில்களை புதுப்பித்து வழிபாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கோயில்களில் அறங்காவலர் பணியில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவற்றை மாற்ற வேண்டும் என அர்ஜுன் சம்பத் கோரிக்கை வைத்துள்ளார் என்ரூ செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர், பட்ஜெட் முடிந்த பிறகு யார் யாருக்கு என்ன பொறுப்புகள் வழங்கப்பட வேண்டுமோ அவர்களுக்கு பதவிகள் வழங்கப்படும். விரைவில் அறங்காவலர் நியமனக்குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

அத்துடன், சட்டப்பேரவையில் ஒரு சில அமைச்சர்கள் மட்டும் தொடர்ந்து பேசி வருகிறார்கள் என்ற கேள்விக்கு, முதலமைச்சர் மற்றும் அரசாங்கத்தை நோக்கி கேள்வி எழும்போது அனைத்து அமைச்சர்களும் பதில் சொல்வதில் என்ன தவறு..? எதிர் கருத்துக்கள் இருந்தால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மற்றவர்களை யார் பேசவேண்டாம் என சொல்வது என்று பதிலளித்துள்ளார்.

அதுபோன்று, இந்து சமய அறநிலைத்துறையில் பல்வேறு அறிவிப்புகள் கொடுத்த பிறகு, நள்ளிரவு 12 மணியிலிருந்து திட்டமிட்டு பல்வேறு பொய் பிரச்சாரங்களை திமுகவினர் வருகின்றனர் என்றும், அன்பில் மாரியம்மன் கோவிலில் அம்மை பாதிக்கப்பட்டவர்களை தங்குவது மற்றவர்களுக்கு நோய் பரவாதா எனவும் திமுக ஐடி சமூக வலைதளங்களில் பொய்களை பரப்பி வருகின்றனர். அந்தத் திட்டம் எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை முழுமையாக தெரியாமல் திமுகவினர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பொய்யான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள் என குற்றம்சாட்டினார்.

அத்துடன், திருச்சி மாநகரில் நடைபெற்று வரும் 02 பாலங்கள் பணிகள் நிறைவுபெற்று மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும்,  இந்த ஆட்சியில் நாங்கள் நீட்டாக இருக்கிறோம் என்று கூறும் முன்னாள் அமைச்சர், இப்போது இந்து சமய அறநிலைத்துறை அறிவிப்புகள் குறித்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், மடியில் கனம் இருப்பதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்த ஆட்சியாளர்கள் தாங்கள் செய்த தவறை கண்டுபிடித்து விடுவார்கள் என்ற பயம் இருப்பதால் தான் நோண்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த பயம் தான் எங்களது ஆட்சிக்கு கிடைத்த முதல் வெற்றி என்று கூறியதோடு, அறிவிப்புகள் வெளியானதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

மேலும், திமுக தேர்தல் அறிவிப்பில் விளம்பரத்திற்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்கள். முதன்மை திருக்கோவில்களில் பக்தர்கள் தங்குவதற்காக சொகுசு விடுதி என்று ஆரம்பித்தனர். எந்த பக்தர்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்பதால் அதனை ரத்து செய்தோம்." என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

அதேப்போன்று, திருச்செந்தூர் ஆய்வுக்குப் பிறகு 90 சதவீதம் மாறிவிட்டது என்றும், வார இறுதி நாட்கள் மற்றும் முக்கிய நாட்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது என்றும், அதனை கையாள்வது என்பது கடினமாகிவிட்டது என்று தெரிவித்தார். அத்துடன், பணம் பெற்றுக்கொண்டு தரிசனத்திற்கு அழைத்து வருவது ஆங்காங்கே நடைபெறுகிறது. 100 நாட்களுக்குள் தலைகீழாக மாற்றிவிட இது ஒன்றும் சினிமா கிடையாது என்றும், ஆங்காங்கே ஒன்று இரண்டு நடந்து வருகிறது. தொடர்ந்து இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அறிவித்தார்.

 

அத்துடன், முதற்கட்டமாக 50க்கும் மேற்பட்ட அனைத்து முதல்நிலை கோவில்களில் மொபைல் கவுண்டர்கள் உருவாக்கப்பட்டு மொபைல் வைத்துவிட்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும், சமூக வலைத்தளங்களில் கோவில் கருவறைகள் எடுத்து வீடியோவாக வெளியிடுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்த முன்னெடுப்பை பொதுமக்கள் தயவுசெய்து திருக்கோவில் நலன்கருதி பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். அத்துடன், திருப்பதி கோயிலில் லக்கேஜ் மற்றும் செல்போன்களை மொபைல் கவுண்டரில் மற்றும் பாதுகாப்பு அறைகளில் வைத்துவிட்டு செல்லும்போது, 12 மணி நேரம் 16 மணி நேரம் ஆகும்போது அமைதியாக இருக்கிறோம். மக்களும் அந்த மனநிலைக்கு வந்து விட்டார்கள். அதுபோல தமிழகத்திலும் உள்ள கோவில்களில் இது நடைமுறை கொண்டுவரப்படும் என்று உறுதியளித்தார்.

அத்துடன், மனநிறையுடன் சாமிதரிசனம் செய்துவிட்டு வரவேண்டும் என்பதற்காக செய்கிறோம் என்றும், கோவில்களில் விஐபி மற்றும் விபிஐபி சினிமா நட்சத்திரங்கள் யாரும் வந்தாலும் கோவில் வளாகத்திற்கு உள்ளே கூடவே சென்று, வீடியோ எடுப்பதை கோவில் வளாகத்தில் அரசியல் கேள்வி கேட்பதை மீடியாக்கள் தவிர்க்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Ramesh announced that soon a system similar to Tirupati Temple will be implemented in Tamil Nadu temples as well


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->