அதிமுகவை கைப்பற்றுவது குறித்தும், சசிகலா குறித்தும் முக்கிய புள்ளி பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுக யாருக்கும் அஞ்சாது. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. தேவை இல்லாதவர்கள் பற்றி, தேவையில்லாமல் பேசு வேண்டிய தேவையில்லை என்பதால் இந்த அமைச்சரும் சசிகலாவை பற்றி எந்த அமைச்சர்களும் பேசுவதில்லை. 

இந்தித்திணிப்பு எதிர்த்தது அண்ணா தலைமையில் இருந்த திமுக தான். தற்போது உள்ள திமுக கிடையாது. இந்தி போராட்டத்தின் போது ரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்து நாடகம் நடித்தவர் கருணாநிதி. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தங்களுக்கு கிடைக்கும் இடங்களில் திமுக எம்பிக்கள் பேரம் பேசி நல்ல விலைக்கு விற்கின்றனர். இரட்டைவேடம் போடுவது திமுகவுக்கு கைவந்த கலை. 

திமுக வெற்றிடத்தையும் அதிமுக வெற்றியையும் நோக்கி பயணித்து வருகிறது. எந்த காலத்திலும் டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்ற போவதில்லை. அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தற்போது அவர் தனிக்கட்சி ஆரம்பித்து விட்டார் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister kadambur raju press meet on feb 16


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal