'வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சியாக கூட வரமுடியாது ; அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி..! - Seithipunal
Seithipunal


வருகின்ற தமிழக சட்டசபைதேர்தலில் அதிமுக எதிர்க்கட்சியாக கூட வர முடியாது என அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: தேர்தல் வருகிறது என்பதற்காக பொய்யான வாக்குறுதிகளை அதிமுக பொதுச் செயலாளர் அறிவித்து வருகிறார் என்றும்,  வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சியாக கூட வரமுடியாது என்று கூறியுள்ளார்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அன்றாடம் கூலி வேலை செய்கின்ற கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் முதன்முதலாக ஒரு பைசா கூட செலவில்லாமல் சிலிண்டர் வழங்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று குறிப்பிட்டுள்ளதோடு, அதிமுகவினர் நாலு சிலிண்டர் தருவோம் என்று சொல்வார்கள்.ஆனால், அது எல்லாம் பொய். அவர்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை. எதிர்க்கட்சியாக கூட வரப் போவதில்லை என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன்,வாக்குறுதிதானே சொல்லிவிட்டு போகலாம் என்று அதிமுகவினர் நினைக்கிறார்கள். மக்கள் அதை நம்ப மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்கள் 70 சதவீதம் அல்ல 100 சதவீத முதல்வர் மீது நம்பிக்கையாக உள்ளனர். சொன்னதையும், சொல்லாததையும் செயல்படுத்தக்கூடிய அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று புகழாரம் சூட்டி பேசியுள்ளார்.

அத்துடன், அனைத்து பகுதியில் கல்வி பயிலும் வசதியை தமிழக முதல்வர் ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும், மத்திய அரசு கல்விக்கு நிதி ஒதுக்க மறுக்கிறது என்று குற்றம் சுமத்தியதோடு, எடப்பாடி பழனிசாமியின் வாக்குறுதிகளை அவரது கட்சியினரே நம்பப்போவதில்லை. மக்களும் நம்பபோவதில்லை என்று அமைச்சர் பெரியசாமி பேசியுள்ளார்.

மேலும், கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றவர் இப்போது எப்படி கூட்டணிக்கு சென்றார்..? தன்னை பாதுகாத்துக் கொள்ளத்தான் பாஜக கூட்டணியில் உள்ளார். அவர் அதிமுக கட்சியை அடகு வைத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளதோடு, மக்கள் மீண்டும் இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக்க அவரை வேண்டும் என தீர்மானித்து விட்டனர். சுமார் 200 தொகுதிகளில் திமுக வெற்றிபெற வாய்ப்புள்ளது. எதிர்க்கட்சியினரிடம் எந்த ஆயுதமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழகத்தில் 24 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டதை அதிமுக ஆட்சியில் குறைத்தனர். எடப்பாடி பழனிசாமி என்ன பொருளாதார நிபுணரா? அவர் எப்படி பொருளாதாரத்தை உயர்த்துவார்? மக்களின் ஏகோபித்த முடிவு ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார் என்பது எனவும் தெரிவித்துள்ளார்.

அதிமுக எடப்பாடி பழனிசாமி முதலில் அறிவித்த தேர்தல் அறிக்கை புஸ்வானமாக போய்விட்டது என்றும், இப்பொழுது அறிவித்ததும் புஸ்வானமாக போய்விடும் என்று கிண்டல் அடித்துள்ளார். அதாவது, அதிமுகவின் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்பமாட்டார்கள். கூட்டணி குறித்து தமிழக முதல்வர்தான் முடிவு செய்தார் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும், மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை என்றால் மத்திய அரசு நிதி கொடுக்க மறுக்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்தியை திணித்ததால் தான், காங்கிரஸ் தமிழ்நாட்டில் போய்விட்டது என்று கூறியுள்ளார். மேலும், அகில இந்திய கட்சியால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. தேர்தல் முடிந்ததும் தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் அறிவித்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அது இதுவரை நீட்டித்துக் கொண்டே செல்கிறது என்றும், எஸ்ஐஆர் குறைகள் குறித்து தற்போது சிந்திக்க வேண்டாம். விடுபட்ட வாக்காளர்கள் தங்களை பட்டியலில் இணைத்துக்கொண்டு தேர்தல் சந்திக்க வேண்டும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister I Periyasamy says that the AIADMK will not even be able to become the opposition party in the upcoming assembly elections


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->