அமலாக்கத்துறை ரெய்டு! தலைமை செயலகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு & சோதனை!
Minister I Periyasamy ED Raid TN Secretary office
அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் பணமோசடி தொடர்பாக இன்று அதிகாலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் தலைமைச் செயலகத்தில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு வருபவர்கள் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடைபெறுகின்றன. சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் பெரியசாமியின் அரசு பங்களா, சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில் உள்ள அவரது மகனும் பழனி தொகுதி எம்எல்ஏவுமான செந்தில் குமார் அறை, மேலும் மகள் இந்திராவின் திண்டுக்கல் இல்லம் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், திண்டுக்கல் சிலப்பாடியில் உள்ள திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் எம்எல்ஏ செந்தில் குமார் வீடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது திண்டுக்கல்லில் சிஆர்பிஎஃப் எஸ்பி உதயகுமார் வாகனம் வந்தபோது திமுகவினர் முற்றுகையிட்டதால் அங்கு பதற்றம் நிலவியது. இதேசமயம், சென்னை தலைமைச் செயலகம் அருகே உள்ள எம்எல்ஏ விடுதியிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் பெரியசாமி வீட்டின் முன்பாக திரண்ட ஆதரவாளர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சோதனைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் எட்டு பிரிவுகளாகப் பிரிந்து பல இடங்களில் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பணமோசடி வழக்கில் முன்னதாகவே விசாரணை நடைபெற்ற நிலையில், இப்போது ஒரே நாளில் பல இடங்களில் சோதனை தொடங்கியிருப்பது பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Minister I Periyasamy ED Raid TN Secretary office