கூவத்தூர் குறுக்குவழி சாமி; அதிமுகவின் உண்மை தொண்டர்களால், அடிப்படை உறுப்பினர் பதவியை இழக்க போகிறீர்கள்; பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் அருண்ராஜ் ..! - Seithipunal
Seithipunal


தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் இன்று மாலை பிரச்சாரம் செய்தார். அப்போது அந்த பிரச்சார மேடையில் பேசிய அமைச்சர் அருண்ராஜ்;  ''அதிமுகவின் உண்மை தொண்டர்களால், பொதுக் குழுவில் உங்கள் அடிப்படை உறுப்பினர் பதவியை இழப்பீர்கள்'' என பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவில் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக விஜய் உருவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், முதல்வர் விஜய்க்குத் திரளும் இந்தக் கூட்டத்தை பார்த்து பயந்துபோன எதிர்க்கட்சிகள், 'இங்கேயே இருக்கலாமா அல்லது துபாய் போலாமா' என்று வடிவேலு காமெடி பாணியில் யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்றும், திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்தால் ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என கிளி ஜோசியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தானும் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவன் என்றும், பிரதிநிதி என்றும் சொல்லிக் கொண்டு, தலைமை பண்பு இல்லாத ஒரு தலைவர், அவர் யார் என்று உங்களுக்கு தெரியும். உண்மைக்கு புறம்பாக, குறுக்கு வழியில் செயல்பட்டுவிட்டு, நம் வேட்பாளர் வரும்போது பொட்டி வாங்கியதாக அவதூறு செய்கிறார். சுயநலம் தான் பழனிசாமிக்கு முக்கியம் என்று சாடியுள்ளார்.

இதனால் அவரை கேகேஎஸ் என்றுதான் கூறவேண்டும் என்றும்,  அதாவது கூவத்தூர் குறுக்குவழி சாமி. மக்கள் எடப்பாடி பழனிசாமியிடம் சத்தியம் கேட்க வேண்டும் என்றும், திமுகவுடன் கூட்டணி பேசவில்லை என பழனிசாமி சத்தியம் செய்ய முடியுமா? அவர் பொய் சத்தியம் செய்தாலும் செய்வார் என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன், திமுகவுடன் உறவு வைத்திருந்தார் என்று சொல்லி தானே, ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கினீர்கள். அதிமுகவின் உண்மை தொண்டர்களால், பொதுக் குழுவில் உங்கள் அடிப்படை உறுப்பினர் பதவியை இழக்கத்தான் போகிறீர்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், மதுராந்தகம் திமுகவுக்கு, தாராபுரம் அதிமுகவுக்கு என பிரித்துகொண்டனர். அதில், செந்தில் பாலாஜி களத்திலேயே இல்லை. அவர் இடைத்தேர்தலில் எப்படி வேலை செய்வார் எனத் தெரியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் இருக்கும் வரை அதிமுகவும், திமுகவும் எதிர்க்கட்சி வரிசையில்தான் இருக்கும். இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெறுவதன் மூலம் தாராபுரம் மக்கள் வெற்றி பெறுவார்கள் என்றும், தமிழக மக்கள் வெற்றி பெறுவார்கள். ஜனநாயகம் வெற்றி பெறும். மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி பெறும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Arunraj warned Palaniswami that he is about to lose his primary membership at the hands of genuine AIADMK cadres


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->